/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nayan_7.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து, அட்லீ -ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கும் 'கனெக்ட்' என்ற படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'மாயா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தநிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'கனெக்ட்' படத்தில் அனுபம் கேர், ஹனியா நபிஷா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ்நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கனெக்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்த இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)