Advertisment

தோனியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா

Nayanthara will play the heroine in Dhoni's film

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். தோனி கேப்டனாக இருந்து சென்னை அணிக்காக நான்கு முறை ஐபிஎல் பட்டத்தை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா தலைமையில் களம் கண்டது. பின்பு எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் தோனிக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. சிஎஸ்கே அணி தற்போது தோனி தலைமயில் விளையாடி வருகிறது.

Advertisment

இதனிடையே தோனி, 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர் ஆஃப் லயன்' என்ற ஆவணத்தொடர் உள்ளிட்ட சில படைப்புக்களை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் ஸ்பை தொடராக 'கேப்டன் 7' என்ற சீரிஸை தயாரித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் தோனி, தமிழில் திரைப்படம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த சஞ்சய் இணைந்துள்ளதாகவும் மேலும் அந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் இது குறித்தான அறிவிப்பை தோனி வெளியிடுவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ACTRESS NAYANTHARA MS Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe