/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_10.jpg)
பெரும்பாலும் ரஜினி படங்கள் வெளிநாடுகளில் வசூல் குவிப்பது வழக்கம். குறிப்பாக 'முத்து' படத்தில் ஆரம்பித்து 'கபாலி' வரை அவரது படங்கள் ஜப்பானில் சக்கைபோடு போட்டன. இந்நிலையில் சமீபகாலமாக இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை வாரி குவித்தன. மேலும் இந்தியில் உருவான ‘டங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் ஆகிய படங்களும் சீனாவில் திரையிடப்பட்டு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இப்படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய்சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிப்பதால் இந்த படத்துக்கு சீனாவில், ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிய இந்தி மற்றும் தமிழ் படங்களைப்போல இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)