Advertisment

ஹிந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் படம்

Nayanthara-Vignesh Sivan movie remake in Hindi

அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'ராக்கி'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சினிமா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. கதாநாயகனாக வசந்த் ரவியும் வில்லனாக இயக்குநர் பாரதிராஜாவும் நடித்திருந்தனர். இப்படத்தை 'ஆர்ஏ' ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது விக்னேஷ் சிவன், நயன்தாராவின் 'ரவுடி பிக்சர்ஸ்' படத்தை வெளியிட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் 'ராக்கி' படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. மேலும் ஹிந்தி ரீமேக் உரிமையை 'வாக்கோ ஃபில்ம்ஸ்' கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக 'ரவுடி பிக்சர்ஸ்' தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 'வாக்கோ ஃபில்ம்ஸ்' ஹிந்தியில் அக்‌ஷய் குமார் மற்றும் பங்கஜ் திரிபாதியுடன் நடிப்பில் உருவாகி வரும் 'ஓ மை காட் 2' படத்தை வெளியிட இருக்கிறது.

Advertisment

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். செல்வராகவன் நடிப்பில் இவர் இயக்கியிருக்கும் 'சாணிக் காயிதம்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

vigneshshivan Nayanthara
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe