nayanthara vignesh shivan wedding photo

Advertisment

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. கோலாகல ஏற்பாடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்து என தடபுடலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி காதலி நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரம் பிடித்தார். இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, அஜித், சரத்குமார், எஸ்.ஜே சூர்யா, கார்த்தி, சூர்யா, ஷாருக்கான் இயக்குநர்கள் அட்லீ, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுமணமக்களை வாழ்த்தியுள்ளனர்.