Skip to main content

தண்ணீர் பாட்டிலில் தனித்துவம்; ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் - களைகட்டும் நயன்-விக்கி திருமணம்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

nayanthara vignesh shivan wedding

 

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் நாளை(9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. 

 

இதையடுத்து மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கோடி கணக்கில் பணம் கொடுத்து வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த திருமண வீடியோ நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதை இயக்கும் பொறுப்பை இயக்குநர் கெளதம் மேனனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று குறுகிய வட்டத்தின் முன்னிலையில் தங்களது திருமணம் நடைபெறும் என விக்னேஷ் சிவன் கூறியிருந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் தொலைபேசி எடுத்து வர கூடாது என்றும் அப்படி எடுத்து வந்தால் அதை பயன்படுத்தி எந்த விதமான புகைப்படமும் எடுக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான மொத்த ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் திருமணம் பற்றிய எந்தவிதமான புகைப்படமோ, வீடியோவோ வெளியே போய்விட கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளதாம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். 

 

இதனை தொடர்ந்து தங்களது திருமணம் தனித்துவமான இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து செய்கிறதாம் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் குடிக்கும் தண்ணீர் பாட்டிலிலிருந்து  பார்க்கும் அனைத்து இடங்களிலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

“என்னை ஐபிஎஸ் அதிகாரியாக்க ஆசைப்பட்டாங்க” - விக்னேஷ் சிவன்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vignesh shivan speech in awarness short film released

போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீட்டு விழா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ad

இந்த விழாவில் சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துக்களை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு விழிப்புணர்வு குறும்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஹெல்மட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறித்தும் சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாந்தனு, யோகி பாபு, அர்ச்சனா, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைத்து குறும்படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 

விழாவில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “காவல் துறை முன்வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை, எனக்கு இயக்க எப்போதுமே 100 சதவீதம் ஆர்வம் இருக்கும். அது போன்ற முன்னெடுப்பு எப்போதுமே நேர்மையாக இருக்கும். இந்த குறுப்படங்கள் மக்களுக்கு ஈஸியாக புரியுர மாதிரி எளிய முறையில் எடுத்துள்ளோம். வெளிநாடுகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவார்கள். ஆனால் நம்ம ஊரில் கொஞ்சம் மெத்தனமாகவே பின்பற்றுவார்கள். எல்லாருக்குமே தனிப்பட்ட முறையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது சரியாகும். நானும் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னையுமே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாங்க. ஆனால் நான் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டேன். அப்படி ஆனாலும் கூட காவல்துறை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிற போது ரொம்ப பெருமையாக சந்தோஷமாகவும் இருக்கும்” என்றார்.