காதலருடன் ஆன்மீக பயணம்; வைரலாகும் நயன்தாராவின் புகைப்படங்கள் 

nayanthara vignesh shivan photos goes viral

விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் படம் இயக்குவதில், நயன்தாரா படம் நடிப்பதிலும் பிஸியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையே அவ்வப்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஆன்மிகசுற்றுலா, இன்ப சுற்றுலா என ஒன்றாக இணைந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ்சிவன் இருவரும் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியகியுள்ளது. சமீபத்தில்சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள்கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சென்னை மேயர் பிரியா ராஜனைசந்தித்து பேசிப்புகைப்படம் எடுத்துக்கொண்டதுகுறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித் நடிக்கும் 'ஏகே 62'படத்தைஇயக்கவுள்ளார்.

ACTRESS NAYANTHARA Nayanthara vignesh shivan vigneshshivan
இதையும் படியுங்கள்
Subscribe