நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இந்த வீடியோ விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதோடு ஒரு புது புரோமோவையும் வெளியிட்டது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் துபாயில் கொண்டாடினார்.
இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ குறித்து புது புரோமோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனிடம் ஏன் நயன்தாரா (ஏன் தேர்வு செய்தீர்கள் என்கிற பாணியில்...)என்றுகேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு விக்னேஷ் சிவன், "ஏஞ்சலினா ஜோலியும் கேட்டாங்க. ஆனால் அவங்க தென் இந்தியாவை சேர்ந்த பெண் இல்லையே. என்ன சார் கேள்வி இது" என ஜாலியாக சிரித்து கொண்டு பதிலளிக்கிறார். மேலும் நயன்தாராவும் பல நிகழ்வுகளை பகிர்ந்துகொள்கிறார். இந்த வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.