திருப்பதியில் டும் டும் டும்; முடிவான விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண தேதி

nayanthara vignesh shivan marriage date out now

'போடா போடி'படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்துஇயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம்நடந்ததாகநயன்தாராவேஒரு போட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள்இவர்களதுதிருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் திருமண குறித்தஅறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் 9ஆம்தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில்விக்னேஷ் சிவன் நயன்தாராதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தநிலையில் தற்போது மீண்டும் இன்று (7.5.2022) திருப்பதி கோவிலுக்கு சென்ற அவர்கள்அங்குநடைபெற்று வரும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.

ACTRESS NAYANTHARA Nayanthara vignesh shivan vigneshshivan
இதையும் படியுங்கள்
Subscribe