/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/894_2.jpg)
கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. கோலாகல ஏற்பாடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்து எனத்தடபுடலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி காதலி நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரம் பிடித்தார். இத்திருமண விழாவில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் மகாபலிபுரத்தில் நேற்று திருமண திருமணத்தை முடித்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி இன்று திருப்பதிக்கு சென்று வழிபட்டனர். முன்னதாக இவர்களதுதிருமணம் திருப்பதியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனும் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)