Published on 17/09/2018 | Edited on 17/09/2018







நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டனர். இது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலான நிலையில் தற்போது அமிர்தசரசில் உள்ள பொற் கோவிலில் நயன் - விக்னேஷ் ஜோடி சிறப்பு சாமி தரிசனம் செய்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதற்காகவும், விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் நாளை வருவதாலும், இருவரும் பொற் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் பொற்கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வழக்கம்போல் இணையத்தில் வைரலாகி வருகிறது.