Advertisment

குல தெய்வக் கோவிலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் வழிபாடு

Nayanthara Vignesh Shiva visit kumbakonam temple

Advertisment

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த 4வது மாதத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். இருவரும் சட்ட விதிமுறைகளை மீறி வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாகத் தொடர்ந்து விமர்சனம் எழுந்தது. இது பெரும் சர்ச்சையாக மாற, அரசு சார்பில் ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. பின்பு அந்த விசாரணை அறிக்கையில், சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து தனது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு 'உயிர் ருத்ரோநீல் என் சிவன்' மற்றும் 'உலக் தெய்விக் என் சிவன்' என பெயர் வைத்துள்ளதாக அண்மையில் இந்த தம்பதி அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அவர்களது குலதெய்வ கோவிலுக்குச் செல்ல இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். பின்பு அங்கிருந்து கார் மூலம் கும்பகோணம் வழுத்தூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vignesh shivan Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe