
பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கோலாகல கொண்டாட்டத்துடன் மகாபலிபுரத்தில் நடந்த இவர்களது திருமனத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்கள் வாழ்த்தினர். பல்வேறு கட்டுபாடுகளுடன் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவன வாங்கியிருந்தது.
‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த திருமண வீடியோவின் ப்ரோமோ அண்மையில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் நெட்ப்ளிக்ஸ் விடியோவில் பயன்படுத்தியதற்காக 3 விநாடிக்கு ரூ.10 கோடி கேட்டு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.
இதனால், “நானும் தனது கணவர் விக்னேஷ் சிவனும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்து 3 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் ‘Schadenfreude’ எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா பயன்படுத்திய அந்த ஜெர்மனிய வார்த்தைக்கு, ‘பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல்’ என்று பொருள்படும். அந்த வகையில் தானும், தன் கணவரும் படும் துண்பத்தை பார்த்து நீங்கள் இன்பபடுகிறீர்க்ள் தனுஷ் என்று ஆதங்கம் பொங்க நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.