Skip to main content

அமெரிக்காவில் அவருடன் செல்பி எடுத்த நயன்தாரா... வைரலாகும் படங்கள் 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஒவ்வொரு விடுமுறையையும் வெளிநாட்டில் கழிப்பது வழக்கம். அப்படி இவர்கள் சுற்றித்திரியும் படங்கள், நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் உலா வந்தவண்ணம் உள்ள நிலையில் தற்போது புதியதாக இவருவரும் உலகின் முன்னணி பாடகர்கள் கலந்து கொள்ளும் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடக்கும் கோச்செல்லா (Coachella) என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் இருவரும் விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களோடு ரசிகர்களாக நடனமாடி உற்சாக வெள்ளத்தில் இருப்பது போன்று உள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது; ஆனா என் கண்ணுக்கு... - நெற்றிக்கண் டீஸர்  

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
nayan

 

 

'மூக்குத்தி அம்மன்' படத்தை தொடர்ந்து, நயன்தாரா நடித்து வரும் படம் 'நெற்றிக்கண்'. நயன்தாரா ஏற்கனவே நடித்த 'மாயா', 'அறம்', 'கோலமாவு கோகிலா' போன்ற படங்களைப் போலவே இப்படமும் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

 

'நெற்றிக்கண்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில், நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். பார்வையற்ற பெண், வில்லனை பழிவாங்குவதே படத்தின் கதை. கடந்த வருடம், செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது .

 

இந்தநிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை தொடர்ந்து, இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள  இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .இயக்குனர்  விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 

 

Next Story

"ராதாரவி சொன்னதுல என்ன தப்பு?" இயக்குனர் பிரவீன்காந் சிறப்பு பேட்டி