Advertisment

புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா !

nayanthara started new business

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாதுறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குலரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். தோல் மருத்துவர் ரெனிட்டா ராஜனுடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் 'தி லிப் பாம் கம்பெனி' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். மேலும் இந்நிறுவனத்தைவிளம்பரப்படுத்தும் பணியில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் ஈடுபட்டனர். நயன்தாராவின் இந்த புதிய முயற்சிக்கு திரை பிரபலங்கள் பலரும்வாழ்த்துக்களைதெரிவித்து வருகின்றனர்.

vignesh shivan ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe