/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/96_34.jpg)
தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஜெயம் ரவியின் 'இறைவன்', சசி காந்த் இயக்கும் 'டெஸ்ட்', நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியில் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள ஜவான் படம் வருகிற 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. அவரது பக்கத்தில் முதல் பதிவாக தனதுஇரண்டு மகன்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றைபகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'நா வந்துட்டேன்னு சொல்லு...' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ மூலம் அவரின் மகன்களின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு வாடகைத் தாயின் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)