Published on 12/11/2018 | Edited on 12/11/2018

கதாநாயகிகளிலேயே அதிக சம்பளமாக ரூ.4 கோடி வாங்கி லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்த 'அறம்' படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. மேலும் படம் வெற்றி பெற்றதுடன், திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வசூல் சாதனைகளை நிகழ்த்தின. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து 'அறம்' படத்தின் இரண்டாம் பாகத்தை 'அறம் 2' என்ற பெயரில், முதல் பாகத்தை இயக்கிய கோபி நயினார் இப்படத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தில், நயன்தாரா அரசியலில் ஈடுபடுகிறார். மேலும் அவர் மக்கள் இயக்க கட்சி தொடங்கி போராடுவது போலவும், அவர் ஆட்சிக்கு வருவது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.