/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_47.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாதுறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்துநடிகை நயன்தாரா, இயக்குநர்அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே நடிகை நயன்தாரா, இயக்குநர்வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இயக்கும் ‘ஆக்சிஜன் (o2)’ படத்தில் நடித்துவருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள ‘ஆக்சிஜன் (o2)’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு பிரபல ஓடிடி தளத்திடம் பேச்சுவார்த்தைநடத்திவருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)