/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_96.jpg)
தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில் தற்போது இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'கோல்ட்', தெலுங்கில் 'காட்ஃபாதர்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மேலும் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும், இதனையடுத்து தனது 75-வது படத்திலும் நடிக்கவுள்ளார். இதனிடையே தனது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நயன்தாரா, நடிப்பிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு தயாரிப்பு மற்றும் சொந்த தொழில்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ரௌடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)