விமர்சனம் செய்த மாளவிகா; பதிலடி கொடுத்த நயன்தாரா

nayanthara replied to malavika mohanan criticize

'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படம் இன்று (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மாயா' திரைப்படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், ஹனியா நபிஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் நயன்தாராவை குறித்து அவர் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்திருந்தார். "ஒரு முன்னணி நடிகை மருத்துவமனை காட்சியில் ஃபுல் மேக்கப் போட்டு, ஒரு முடி கூட கலையாமல் இருக்கிறார். சாகும் தறுவாயில் இருக்கும் ஒருவர் எப்படி அப்படி இருக்க முடியும். கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு சின்ன ரியலிஸ்டிக் கூட வேண்டாமா" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நயன்தாரா ஒரு பேட்டியில் மாளவிகா மோகனன் கூறிய விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு நேர்காணலில் பார்த்தேன். ஒரு நடிகை என் பெயர் குறிப்பிடாமல் நான் நடித்த காட்சி குறித்து விமர்சித்திருந்தார். மருத்துவமனை காட்சியில் பக்காவாக இருக்க வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், முடியெல்லாம் கலைந்துபோயா அங்கு இருக்க முடியும். நிஜத்தில் மருத்துவமனைக்கு சென்றால் கூட முடியெல்லாம் இணைத்து கட்டிவிட்டு விடுவார்கள்.

கமர்ஷியல் படத்துக்கும் ரியலிஸ்டிக் படத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. ரியலிஸ்டிக் படங்கள் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதுபோல் நம்மால் முடிந்த மெனக்கெடல்களை முயற்சிக்கலாம். ஆனால் அந்த நடிகை குறிப்பிட்டது கமர்ஷியல் படம். அதில் என் இயக்குநர் என்ன கேட்கிறாரோ, அதைத்தான் நான் கொடுக்க முடியும். அந்தந்த படத்திற்கு ஏற்றது போலத்தான் நாம் நடிப்பைக்கொடுக்க முடியும். அது படத்திற்கு ஏற்றதுபோல் மாறுபடும்" எனக் கூறியுள்ளார்.

மாளவிகா மோகனன் மற்றும் நயன்தாராஇருவரும் பெயரைக் குறிப்பிடாமல் பேசியிருந்தாலும், அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ACTRESS NAYANTHARA malavika mohanan
இதையும் படியுங்கள்
Subscribe