Advertisment

ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள்; ஆக்‌ஷனில் மிரட்டும் நயன்தாரா

nayanthara rakkayie title teaser released

Advertisment

திருமணத்துக்கு பிறகும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ஸ் படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இன்று(18.11.2024) பிறந்தநாள் கொண்டாடுகிறார் நயன்தாரா. இதையொட்டி திரைப் பிரபலங்கள், ரசிக்ரகள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படக்குழு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் அறிவிப்பை டைட்டில் டீசருடன் வெளியிட்டுள்ளனர்.

ராக்காயி என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. செந்தில் நல்லசாமி இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் டீசரை பார்க்கையில் கூலி வேலை செய்யும் பெண்ணாக இருக்கும் நயன்தாரா, தன்னை நோக்கி தாக்க வரும் நூற்றுக்கணக்கான நபர்களை ஆயுதங்களால் தாக்குகிறார். ரத்தம் தெறிக்க தெறிக்க அவர்களுடன் சண்டை போடும் காட்சி இடம் பெறுகிறது. இந்த மூலம் ஆக்‌ஷனில் மிரட்டும் நயன்தாரா படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே அவரது திருமண வாழ்க்கை ஆவனப் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe