Nayanthara quits from Shah Rukh Khan movie

Advertisment

தமிழ் சினிமாவின்முன்னணி இயக்குநராகஇருக்கும் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கிவருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின்அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புபுனேவில் தொடங்கி நடைபெற்றுவந்தது.

சமீபத்தில், ஷாருக்கான்மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் ஷாருக்கான்மன உளைச்சலில் இருப்பதாகவும், இதன் காரணமாக அவரால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தாமதமாகிவருவதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நயன்தாரா இப்படத்திலிருந்து விலகுவதாகவும், அவருக்குப் பதில் வேறொரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தைநடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இத்தகவலைப் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன. படக்குழு தரப்பிலிருந்து இதுகுறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்தான் இத்தகவலின்உண்மைத்தன்மையை உறுதிசெய்ய முடியும் .

Advertisment

நயன்தாரா பாலிவுட்டில் நடிக்கும் முதல் படம் என்பதால் பிற படங்களுக்கான தனது கால்ஷீட்டில் மாற்றம் செய்துகொண்டுஇந்தப் படத்தில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.