Advertisment

முதல் முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

nayanthara to play heroine in kamal maniratnam movie

Advertisment

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது. தென்னாப்பிரிக்காமற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் கமலின் காட்சிகளை முடித்துள்ள படக்குழு அடுத்த மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பைத்தொடங்கவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத், வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்கவுள்ள படம் கமலின் 234வது படமாக உருவாகவுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனமும் தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார்.

இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் கமலுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் நயன்தாரா.

KH 234 Nayanthara maniratnam ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe