/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rn.jpg)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினி ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா நடிப்பதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. மேலும் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருவதாகவும், மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்காக 60 நாட்கள் நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us