
'வேலைக்காரன்' வெற்றியை தொடர்ந்து 'சீமராஜா' படத்தில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அதே நேரத்தில் எஸ்.எம்.எஸ் பட புகழ் ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ரவிக்குமார் படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா இரண்டாவது முறையாக நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாரா ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.