Advertisment

பிரபல ஹீரோவுடன் ஜோடி; ஹாரர் ஜானரில் நயன்தாரா

nayanthara next to pair with Raghava Lawrence under rathna kumar direction

Advertisment

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் அடுத்ததாக ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனிடையே லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதையும் எழுதி வருகிறார். அந்த வகையில், தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'லியோ' படத்தில் பணியாற்றி வருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="96cc2ac7-9d34-4b97-818d-26c67a6e1bd3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_62.jpg" />

இந்த நிலையில் ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ராகவா லாரன்ஸை வைத்து ஒரு புது படம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், ஹாரர் ஜானரில் இப்படம் உருவாகுவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நயன்தாரா, ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா 2' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor raghava lawrence Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe