Advertisment

தனுஷ் பட இயக்குநருடன் இணைந்த நயன்தாரா - புதிய பட அறிவிப்பு

nayanthara next movie with durai senthikumar

Advertisment

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில் தற்போது இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'கோல்ட்', தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்துள்ளார். மேலும் அஷ்வின் சரவணன் இயக்கும் 'கனெக்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது75வது படத்திலும் நடிக்கவுள்ளார். அப்படத்தைஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9ab93740-0c0e-4739-af5b-d946e030594b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_26.jpg" />

நயன்தாரா இன்று (18.11.2022) தனது பிறந்தநாளைக்கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் விக்னேஷ் சிவன்தனது ஸ்டைலில் வாழ்த்துக் கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.தனுஷை வைத்து கொடி, பட்டாஸ் படங்களை இயக்கி பிரபலமான துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இப்படம் நயன்தாராவின் 81வது படமாக உருவாகிறது. இப்படக்குழு நயன்தாராவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

vignesh shivan ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe