சென்ற ஆண்டு வெற்றி மேல் வெற்றி படங்களில் நடித்த நயன்தாராவிற்கு இந்த தொடக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த ஜெய்சிம்ஹா என்ற தெலுங்கு படமும் வெற்றி பெற்று நட்சத்திர அந்தஸ்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியது. இந்நிலையில் நயன்தாரா இந்த ஆண்டில் கைவசம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய மூன்று படங்களை வைத்துள்ளார். இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5ஆம் தேதியும், இப்படத்தின் சிங்கிள் பாடலை மார்ச் 8ஆம் தேதியும் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.