
அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'கோலமாவு கோகிலா'. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகி செம ஹிட்டான இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமைக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது இந்தப் படத்தைகன்னடத்தில் ரீமேக் செய்யத்திட்டமிட்டுள்ளனர். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ரட்சிதா ராம் நடிக்கவுள்ளார்.
'கோலமாவு கோகிலா' கன்னட ரீமேக்கை மவுரியா இயக்கவுள்ளார். லைகா நிறுவனத்திடம் இதன் ரீமேக் உரிமைக்கான இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில், இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)