nayanthara, madhavan test movie release update

தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.

Advertisment

கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பின்பு டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் இப்படம் நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment