பிரச்சனைகளுக்கு முடிவுகட்டி களம் இறங்க காத்திருக்கும் நயன்தாரா படம்...

நயன்தாரா கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உருவாகி ரிலீஸாக தாமதமாகி வரும் படம் கொலையுதிர் காலம். இந்த படத்தை உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கியுள்ளார்.

nayanthara

இந்த படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து விலகினார். இவர் இந்த படத்திலிருந்து விலகினார் என்பது இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போதுதான் பலருக்கு தெரியவரும். அதை அவரே ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகாவும் நடித்துள்ளார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, வருகிற 26ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான ‘காமோஷி’ அண்மையில் வெளியாகி போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara
இதையும் படியுங்கள்
Subscribe