Nayanthara in Kavin movie

லிப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக வலம் வருகிறார் கவின். இதில் ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ (Bloody Beggar) என்ற தலைப்பில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையில், பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மாஸ்க்; படத்தில் கவினோடு இணைந்து ஆன்ரியா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தில், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.