தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படங்களின் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார். இவர் நேர்காணல் கொடுத்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகப்போகிறது. இந்நிலையில் வோக் என்னும் பிரபல இதழின் அட்டை புகைப்படத்திற்கான போட்டோ ஷூட் மற்றும் நேர்காணலை கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

Advertisment

nayanthara

சமீபத்தில் நயன்தாரா குறித்து ஒரு மேடையில் ராதாரவி சர்ச்சையாக பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகியில் நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாரா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்னுடைய கொள்கையிலிருந்து மாறவில்லை நயன்.

வோக் இதழில் தனத் புகைப்படம் அட்டை படமாகவும், நேர்காணலும் வரவேண்டும் என்று ஹீரோயின்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படி சினிமா உலகில் பிரசித்தியான இதழ் தென்னிந்திய நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. நயன்தாராவின் நேர்காணல் வோக்கில் இடம்பெறுவதன் மூலம் முதல் தென்னிந்திய நடிகையின் நேர்காணல், அட்டை படம் என்ற சாதனையை பெறுகிறார். மேலும் அந்த பேட்டியில் பல விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

Advertisment

sss

ஏன் பேட்டிகள் அளிப்பதில்லை என்ற கேள்விக்கு நயன்தாரா, "நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகம் அறிய வேண்டாம். நான் தனிமை விரும்பி. கூட்டங்களை என்னால் கையாள முடியாது. பல முறை நான் பேசியது தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் எதிர்வினைகளை என்னால் கையாள முடியவில்லை. என் வேலை நடிப்பது. நான் நடிக்கும் படங்களே பேசும்" எனப் பதிலளித்துள்ளார்.

முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.