Advertisment

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை

Nayanthara has been paid Rs10 crore act Jayam Ravi film

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி தற்போது அகிலன், ஜன கன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அகமதுஇயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்வெளியானது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாககூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழில் உச்ச நடிகையாக வலம் வரும்நயன்தாராவின் சம்பளம் மற்ற நடிகைகளை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.3 கோடி வாங்கினார். அதன் பின் ரூ.5 கோடியாக மாறிய நிலையில் தற்போது அவர் ஜெயம் ரவி படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம்கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து படக்குழு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ponniyin selvan jayam ravi ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe