nayanthara

Advertisment

‘போடா போடி’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் எனும் படத்தை இயக்கும்போது, இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கடந்த ஒரு வருடமாக வதந்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இன்னும் சம்மந்தப்பட்ட இருவரும் அதுகுறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.

அண்மையில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட இருவரும் தனி விமானம் மூலம் கேரளா பயணித்தனர். அதன்பின் அங்கிருந்து விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவா சென்றனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவனுக்கு பல சர்ப்ரைஸ்களை கொடுத்திருக்கிறார் நயன்தாரா. அப்போது அவருக்கு கேக், அலங்காரம் செய்யப்பட்ட அறை, இசை, பாடல் என சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் நயன்தாரா. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்துள்ளார்.