தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறவர் நயன்தாரா. இவர் தற்போது இரண்டு பெரிய நடிகர்களான விஜய் மற்றும் ரஜினி படங்களில் நடித்து வருகிறார். பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த நிலையில் பல வருடங்களாக படபிடிப்பில் இருந்து வெளிவர காத்துக்கொண்டிருந்த கொலையுதிர் காலம். இந்த படத்தில் நயன்தாரா நடிக்க சக்ரி டோலட்டி இயக்கியிருந்தார். கடந்த மாதமே இப்படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் நீதிமன்றம் இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இதைதொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் இப்படத்தின் தடையை நீக்கியுள்ளது. இதனால் விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.