பிரேமம் இயக்குனரின் படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா!

nayanthara

2013-ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். அதன் பிறகு, அவரது இயக்கத்தில் வெளியான 'பிரேமம்' படம் மாபெரும் வெற்றிபெற்றது. அப்படத்தில் நடித்த நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலருக்கும் அப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில், அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ள அப்படத்திற்கு 'பாட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்கம், படத்தொகுப்பு, இசை என மூன்றையும் அல்ஃபோன்ஸ் புத்திரன் கவனித்துக்கொள்ள, படத்தை யு.ஜி.எம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில், ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் துவங்கவுள்ளது.

ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Subscribe