nayanthara documentry issue regards chandramukhi movie scenes

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமண வாழ்க்கை ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியது. நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடந்த 18ஆம் தேதி அந்நிறுவன ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக படத்தின் ட்ரைலர் வெளியான போது, அதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும் பேசும் மூன்று வினாடி வீடியோ இடம்பெற்றிருந்தது.

Advertisment

இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ட்ரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த மூன்று வினாடி வீடியோவிற்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதனை நயன்தாரா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்து, இந்த செயல் கீழ் தரமானது என்று கூறி தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப, நயன் தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Advertisment

இதையடுத்து அந்த ஆவணப் படம் வெளியான நிலையில் அதில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றிருந்தது. இதையடுத்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.

இந்த நிலையில் அதே ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த சந்திரமுகி பட காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு படத்தில் இருந்து காட்சிகளை பயன்படுத்த அனுமதி வழங்கிய தடையில்லா சான்றிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment