/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nayan_8.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாராவின் 37 வது பிறந்தநாளை காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)