Published on 26/11/2018 | Edited on 26/11/2018

விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் எளியமுறையில் நடைபெற்று படத்தின் செட் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தது. இந்நிலையில் படத்தில் யார் நாயகியாக நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என படக்குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அரசியல் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.