தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிற நயன்தாரா, தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளாவிலுள்ள கொச்சினுக்கு சென்றுள்ளனர். தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து கொச்சின் சென்றுள்ளனர். அப்போது, அதை புகைபடமெடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.