தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவரும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவனுடன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைதொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று சிறப்பு பூஜை மேற்கொண்டுள்ளார் நயன்தாரா.