இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களுக்கு ‘உயிர் ருத்ரோநீல் என் சிவன்’ மற்றும் ‘உலக் தெய்விக் என் சிவன்’ என இரட்டை ஆண்குழந்தை இருக்கிறது. கடந்த மாதம் இருவரும் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது. நயன்தாரா தமிழில் மூக்குத்தி அம்மன் 2, தெலுங்கில் சிரஞ்சீவியின் 157வது படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஷன் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற் கொண்டனர். அப்போது அவர்களை பார்த்த பக்தர்கள் கையசைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். பக்தர்களின் அன்பிற்கும் நயன்தாராவும் கையசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இவர்களது சாமி தரிசன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/03/489-2025-07-03-17-22-38.jpg)