Advertisment

மீண்டும் யோகி பாபுவுடன் இணையும் நயன்தாரா 

nayanthara

Advertisment

தனி கதாநாயகியாக நடித்து தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா தன் அடுத்த படமான "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். 'அறம்' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்கள் மூலம் பிரபலமாகி பின் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்' படத்தை இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். மேலும் ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்கிறார். கலையரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ் பேசும்போது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. 'அறம்' படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார். "ஐரா" என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு ஹாரர் படமாகும்" என்றார்.

Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe