Advertisment

வதந்திக்கு நயன்தாரா விளக்கம்

nayanthara agasthiya theatre issue

Advertisment

சென்னைதண்டையார்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். 1967ல் தொடங்கப்பட்ட இத்திரையரங்கம்எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறைகளின் டாப் ஹீரோக்கள் படங்கள் திரையிடப்பட்டன. பின்பு கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனாகாலகட்டத்தில், சில காரணங்களால் இத்திரையரங்கம்மூடப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி இத்திரையரங்கை வாங்கி, அந்த இடத்தில் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை கட்டப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இத்தகவல் குறித்து விளக்கமளித்த தம்பதியின்செய்தி தொடர்பாளர், அதில் உண்மையில்லை என மறுத்துள்ளார். மேலும்திரையரங்க நிர்வாகமும்உண்மைக்கு புறம்பானவை என செய்தியாளர்களிடம்தெரிவித்துள்ளது.

நயன்தாரா, தமிழில் ஜெயம் ரவியின்'இறைவன்',இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் தற்போதுசசி காந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.இந்தியில் ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார்.விக்னேஷ் ஹசிவன்தற்போது பிரதீப் ரங்கநாதனைவைத்து ஒரு படம் இயக்க உள்ளதாககூறப்படுகிறது.

Nayanthara theatre vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe