Advertisment

பிரமாண்ட வெப் சீரிஸில் நடிக்கிறாரா நயன்தாரா? 

vdgadgs

Advertisment

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான பாகுபலி படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் சிவகாமி தேவி ராஜமாதாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் வீரமான, துணிச்சலான, தலைமைப்பண்புடன் கூடிய அரசியாக நடித்து பிரமிப்பூட்டினார். இந்நிலையில், சிவகாமி தேவியின் இளம் வயது வாழ்க்கையை 'பாகுபலி 3' என்ற பெயரில் தற்போது வெப் சீரிஸுக்காக 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவிருக்கிறார்கள்.

சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த வெப் சீரிஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில் இத்தொடரில் சிவகாமி தேவியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடக்கவுள்ளது. மேலும் இது அடுத்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

baahubali Nayanthara
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe