gdgsgsv

ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய அட்லீ, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இவர்இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பிகில்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாக நீண்டநாட்களாகவே கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்தப் படம் உறுதியாகிவிட்டதாகவும் அந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை இயக்குநர் அட்லீ தொடங்கிவிட்டதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இந்த நிலையில், அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு இப்படத்தில் நடிக்க மிகப்பெரிய சம்பளம் பேசபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.