nayanthaara 75th movie announcement released

Advertisment

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில் தற்போது தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் இந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்திலும் நடிக்கிறார். அதோடு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் 'கோல்ட்' படத்தில் ப்ரிதிவிராஜுக்கு ஜோடியாகவும் தெலுங்கில் மோகன்ராஜா, சிரஞ்சீவி கூட்டணியில் உருவாகும் 'காட்ஃபாதர்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் 75-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். நிலேஷ் கிருஷ்ணா, ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தெரிவித்து அதிகாரப்பூர்வமான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளார்கள்.