'Nayanthara 75' - A call from the superstar rajinikanth

Advertisment

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இதனிடையே அவரின் 75-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். நிலேஷ் கிருஷ்ணா, ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினிகாந்த் 'நயன்தாரா 75' படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிலேஷ் கிருஷ்ணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நிஜமாகவே என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நான் அறிமுகமாகும் முதல் படமான 'நயன்தாரா 75' படத்தின் பூஜை சூப்பர் ஸ்டாரின் அழைப்பிலிருந்து ஆரம்பித்தது. அவர் ஆசீர்வதித்தார், வாழ்த்தினார். இதை விட வேற என்ன வேண்டும். லவ் யூ தலைவா" என குறிப்பிட்டுள்ளார்.