nayanthara 75 Annapoorani release date update

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில்சசி காந்த் இயக்கும் 'டெஸ்ட்', நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

இதில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. இப்படத்தை 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்க முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. 'அன்னபூரணி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்தநிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. சமையல் கலை குறித்து உருவாகியுள்ள இப்படம் காமெடி மற்றும் எமோஷனலும் கலந்து உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.